Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு உடனடியாக இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்! மத்திய அரசு அறிவுறை

தமிழகத்தில் பெய்த கனமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மக்களவையில் பேசிய நிதித்துறை இணை  அமைச்சர் ஜெயந்த் சின்கா, "வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதில் ஆர்வம் காட்டாத வாடிக்கையாளர்களால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.64,300 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. 

 

இந்த விவகாரத்தை திறமையாக  சமாளிப்பதற்கான விரிவான வழிவகைகளை அரசு பல கோணங்களில் ஆலோசித்து வருகிறது. இதற்காக ரிசர்வ் வங்கியுடன் தீவிர ஆலோசனைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் கனமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்க வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ