Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோகோ கோலா ஆலைகளை மூடிவிடுவோம்!

காற்றடைக்கப்பட்ட பானங்களுக்கு 40 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்தால் இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூடிவிடுவோம் என்று கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நிர்ணயிப்பது தொடர்பான பரிந்துரைகளை கொண்ட அறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் அவருடைய குழு சமர்பித்தது. அந்த அறிக்கையில் காற்றடைக்கப்பட்ட பானங்களுக்கு 40 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி என்று பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் காற்றடைக்கப்பட்ட பானங்களுக்களுக்கு 40 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூடிவிடுவோம் என்று கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோகோ கோலா இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசியாவின் தலைவர் வெங்கடேஷ் கினி கூறுகையில், "இந்தியா முழுவதும் 56 ஆலைகளை இயக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் உள்ள ஆலைகளை மூடி விடுவோம்" என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP