Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புரட்டிப் போட்ட பேய் மழையும், தமிழகத்தின் பொருளாதார இழப்புகளும்

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாறு காணாத அளவில் பெய்த மழையால் தமிழகமே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. முக்கியமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை முற்றிலுமாக மழை வெள்ளம் சூறையாடியது. இதனால் 300க்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகளும் பல்லாயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.


இந்திய தொழில் கூட்டமைப்பான அசோசம் நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழையில் ரூ. 15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணித்துள்ளது. மேலும் சில கணிப்புகள் ரூ. 50,000 கோடி, ரூ. 1 லட்சம் கோடி என்று அறிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு பட்ஜெட் படி 2015-ம் ஆண்டுக்கான செலவு ரூ. 1,47,297 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய ஆகும் செலவினால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னை மாநகராட்சியில் ஏராளமான தொழில்கள் இயங்குகின்றன. ஐடி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கிடங்குகள், ஹோட்டல்கள், கடைகள், சிறு, நடுத்தர மற்றும் குறுந்தொழில்கள் ஆகியவை ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கிக் கிடக்கின்றன. இதனால் உற்பத்தியும் மூலப் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களை நம்பியே 60 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களில்  பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள இழப்புகளை இனி பார்க்கலாம்.

 

மனித உயிரிழப்பு - 


 

 

 

   340க்கும் மேல்

 

 

 

 

கால்நடைகள் உயிரிழப்பு -

 

 

   1500க்கும் மேல்


 

 

மொத்த குடிசைகள் - 4,25,725 -

 

  

    பாதிக்கப்பட்ட குடிசைகள் - 1,44,597


 

 

பாதிக்கப்பட்ட வாகனங்கள் -

 

 

     25 லட்சம்


 

 

 

 

 ராயல் என்ஃபீல்டு பைக் -

 

 

     11,200


 

 

 பாதிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் -

 

     ரூ. 3000 கோடி


 

நெய்வேலி என் எல் சி இழப்பு -

 

 

 

     ரூ. 400 கோடி


 

மொத்த சாலைகள் - 8500க்கும் மேல் -

 

 

      பாதிக்கப்பட்ட சாலைகள் -

      3000க்கும் மேல்


 

 

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் -

 

 

       ரூ. 15000 கோடி

 

 

 

விமான போக்குவரத்து -

 

 

       ரூ. 1000 கோடி

 

 

 

 

ஐடி நிறுவனங்கள் -

 

 

       ரூ. 450 கோடி

 

 

 

 

 

தொலை தொடர்பு நிறுவனங்கள் -

 

 

      ரூ. 300 கோடி

 

 

 

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் -

 

 

       ரூ. 200 கோடி

 

 

 

 

 

அம்பத்தூர் தொழிற்பேட்டை -

 

       ரூ. 500 கோடி

 

 

 

சிறு மற்றும் பெரிய கடைகள் -

 

       பாதிக்கப்பட்ட கடைகள் - 500

       நஷ்டம் - ரூ. 250 கோடி

 

 

 

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் -

 

       3 லட்சம் ஏக்கருக்கும் மேல்

 

 

 

வீணான உணவுப் பொருட்கள் -

 

 

       ரூ. 100 கோடி

 

 

 


சினிமா -

 

 

       ரூ. 25 கோடி



 

இந்த இழப்புகள் தோராயமானவைதான். இவை முறையான கணக்கெடுப்புகளுக்குப் பிறகு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- ஜெ. சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ