Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்க சேமிப்பு திட்டத்தில் 200 கிலோ தங்கம்! ஷீரடி சாய் பாபா கோயில் திட்டம்

நம் நாட்டில் ஐந்து மிகப்பெரிய செல்வமுடைய கோயில்களில் ஷீரடி சாய் பாபா கோயிலும் ஒன்று. இந்த கோயிலுக்கு சொந்தமாக 380 கிலோ தங்கம் உள்ளது. இந்த நிலையில் தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் 200 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான 40 கிலோ தங்கத்தை தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்க அந்த கோயிலின் நிர்வாகிகள் திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சாய் பாபா கோயிலின் அறக்கட்டளை நிர்வாகிகள் 200 கிலோ தங்கத்தை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய விரும்புகிறார்கள். இதன் மூலம் ஆண்டு வட்டியாக 1.25 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ