Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீமேட் கணக்கு விதிகளில் செபி மாற்றம்

டீமேட் கணக்கு வைத்திருப்பதற்கான விதிகளை இந்திய பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) மாற்றியுள்ளது.


அதிக அளவில் நிதி சேர்ப்பது மற்றும் டீமேட் கணக்குகளை வைத்திருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக அனைத்து டீமேட் கணக்குகளையும் அடிப்படை சேவை டீமேட் கணக்குகளாக (பிஎஸ்டிஏ) எடுத்துக் கொள்ள செபி முடிவு செய்துள்ளது.

அடிப்படை சேவை டீமேட் கணக்கு (BSDA) என்பது வரையறுக்கப்பட்ட சேவைகள் மற்றும் குறைந்த செலவுகளில் பெறப்படும் சேவைகள் கொண்ட கணக்கைத் தான் BSDA கணக்கு என அழைக்கப்படுகிறது. Basic Services Demat Account என்பதன் சுருக்கமே BSDA

தகுதியுள்ள டீமேட் கணக்கு வைத்திருப்பவர் தங்கள் கணக்கை வழக்கமான டீமேட் கணக்கிலிருந்து அடிப்படை சேவை டீமேட் கணக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று செபி தெரிவித்துள்ளது.



 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ