Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிபாதியாக குறைந்தது ஐபோன் விலை!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 6S மற்றும் 6S பிளஸ் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் ஐபோன் 5S-ன் விற்பனை கடும் சரிவை சந்தித்து அதன் விலை சரிபாதியாக குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 5S-ன் விலை 44,500 ரூபாயாக இருந்தது. இதன்பின் ஐபோன் 6S மற்றும் 6S பிளஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இது வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் ஐபோன் 5S-ன் விற்பனை கடும் சரிவை சந்தித்தது.

அதன்படி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில், தசரா, தீபாவளி என இரண்டுமுறை விலை குறைத்து இருந்தது. இப்போது, 3வது முறையாக ஐபோன் 5S-ன் விலையை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வரை சரிந்து 24,999 ரூபாயாக ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ