Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிளின் புதிய ஐபேட் ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்

நம் நாட்டில் 12.9 இன்ச் திரையுடன் கூடிய ஆப்பிள் ஐபேட் ப்ரோ டேப்லட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய கையடக்க அளவு கொண்ட ஆப்பிள் ஐபேட் ப்ரோ ஆரம்ப விலையாக 67,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் 32GB மெமரி கொண்ட டேப்லட் 67,900 ரூபாய்க்கும், 128GB மெமரி கொண்ட டேப்லட் 79,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. 4G LTE உடன் கூடிய 128GB மெமரி கொண்ட டேப்லட் 91,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் ஐபேட் புரோ அக்சரிஸ் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆப்பிள் பென்சில் 8,600 ரூபாய்க்கும், ஸ்மார்ட் கீபோர்ட் 14,900 ரூபாய்க்கும், சிலிகான் கேஸ் 6,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ