Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சில்லறை விலை பணவீக்கம் 5.4 சதவிகிதமாக அதிகரிப்பு

கடந்த நவம்பர் மாதம் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள்களின் விலை உயர்வால் தொடர்ந்து நான்காவது மாதமாக சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு நவம்பரில் 3.27 சதவிகிதமாக இருந்தது.  கடந்த அக்டோபரில் 5 சதவிகிதமாகவும் இருந்தது.

காய்கறிகளுக்கான விலை இரண்டு மடங்கு உயர்ந்து 4 சதவிகிதமாகவும், பழங்களுக்கான பணவீக்கம் 2.07 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளுக்கான சில்லறை விலை பணவீக்கம் 46.08 சதவிகிதமாக உயர்ந்தது. மீன், இறைச்சி ஆகியவற்றிற்கான பணவீக்கமும் 5.34 சதவிகிதம் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ