Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் நிறுவனங்களை தேர்வு செய்தது தவறா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலுகைகளைக் கண்டு  70 சதவிகித தனியார் துறையின் ஊழியர்கள் மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் தனியார் துறையை தாங்கள் தேர்வு செய்தது தவறா என்ற எண்ணம் அவர்களிடம் தோன்றியுள்ளதாக ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இதனால் தனியார் நிறுவனங்களில் அடுத்த ஆண்டு சாதாரணமாக ஊழியர்களுக்கு 12 சதவிகிதம் முதல் 14 சதவிகித ஊதிய உயர்வு இருக்கும் என்றும், முக்கிய பணியாளர்களுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை உயர்வு இருக்கும் என்று ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், 2016-ல் 88 சதவிகித நிறுவனங்கள் கூடுதலாக ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இ-காமர்ஸ் துறை மற்றும் மேக் இன் இந்தியா செயல்பாடுகளால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது நிதிக்குழு பரிந்துரை அமலாக்கத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ