Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் நோட்டுகளில் கிறுக்கினால் செல்லாதா? வதந்திகளை நம்பாதீங்க!

இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் ஏதாவது கிறுக்கி இருந்தால் அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்று வதந்திகள்  வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்  என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது கிறுக்கப்பட்டிருந்தால் அவை வரும் ஜனவரி முதல் செல்லாது என்ற தகவல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், இந்த தகவல் உண்மையில்லை. ரூபாய் நோட்டுகளில் கிறுக்கி இருந்தால் அந்த ரூபாய் நோட்டு செல்லும். மக்கள் எந்த வித அச்சமின்றி பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என்றார்.

அதேசமயம் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close