Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும் 'பான்' எண் கட்டாயம்! மத்திய அரசு அதிரடி

நம் நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்தும் வகையில் ரூபாய் 2 லட்சத்திற்கும் அதிகமாக எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், 'அனைத்து வகையான வங்கி கணக்கு தொடங்குவதற்கும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது. உணவு கட்டணம், வெளிநாட்டு பயண டிக்கெட் போன்றவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலவழித்தால் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது. ரூபாய் 2 லட்சத்திற்கும் அதிகமாக எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்' என்றார்.

அதேசமயம் ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டும் 'பான்' எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close