Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்களைவிட பெண் கோடீஸ்வரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 20 ஆண்டுகளில் ஆண் கோடீஸ்வரர்களைவிட பெண் கோடீஸ்வரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யூபிஎஸ்-பிடபுள்யூசி (UBS-PwC ) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோடீஸ்வரர்கள் குறித்து யூபிஎஸ்-பிடபுள்யூசி ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 1995-ல் 22 ஆக இருந்த பெண் கோடீஸ்வரிகளின் எண்ணிக்கை 6.6% உயர்ந்து 2014-ல் 145 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆண் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5.2% மட்டுமே உயர்ந்து 1,202 ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிய பெண் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளதே பெண் கோடீஸ்வரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆசியாவில் 3 ஆக இருந்த பெண் கோடீஸ்வரிகளின் எண்ணிக்கை 8.3% உயர்ந்து 25 ஆக அதிகரித்துள்ளது.

 

ஆனால், யூரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெண் கோடீஸ்வரிகளின் எண்ணிக்கை 2.7% மற்றும் 1.7% மட்டுமே அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ