Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி திடீர் உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இன்று (16.12.12) திடீரென உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று வெளியிட்டன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.1.17 காசுகளும் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு 2,500 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP