Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் மொழியில் ஷாப்பிங் வசதி ஸ்நாப்டீல் அறிமுகம்

வாடிக்கையாளர்களுக்கு தமிழ் உட்பட 12 மொழிகளில் செல்போன் ஆப் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை ஸ்நாப்டீல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆப் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை ஸ்நாப்டீல் நிறுவனம் நேற்று (15.12.12) அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகள் ஜனவரி 26-ம் தேதி முதல் சேர்க்கப்படும் என்று ஸ்நாப்டீல் தெரிவித்துள்ளது.

இந்த புதிய உக்தி மூலம் எங்களது சந்தையை விரிவுபடுத்த முடியும். இதன் மூலம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஷாப்பிங் செய்வோரை ஈர்க்க முடியும் என்று ஸ்நாப்டீல் இணை நிறுவனர் ரோஹித் பன்சால் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ