Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழை பாதிப்பு: வீட்டை சீரமைக்க 9.68 சதவிகிதத்தில் ஃபெடரல் வங்கி கடன்


கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி மழையினால் பாதிப்படைந்த வீடுகளை மறு கட்டுமானம் செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும், பெயின்ட் செய்வதற்கும் 9.68 சதவிகித வட்டிக்கு கடன் வழங்குகிறது. 
 
முதல் வருடம் 9.68 சதவிகிதத்திலும் இரண்டாம்  ஆண்டு முதல் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்திலும் வட்டி வசூலிக்கப்படும். அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் அல்லது ஒருவரின் வீட்டுக் கடன் மதிப்பில் 50 சதவிகிதம் முதல் ஃபாயர் (FOIR) மதிப்பில் அதாவது கடனை திருப்பி செலுத்தும் தகுதியில் 70% வரை  கடன் பெறலாம். இந்த கடனிற்கான காலம் 10 ஆண்டுகள்.
 
 
 
ஒரு வேளை புதிதாக கடன் வாங்கியவர்களாக இருந்தால் ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த குறிப்பிட்டுள்ள காலத்திற்குள்ளேயே  இந்த புதிய கடனையும் சேர்த்து செலுத்த வேண்டும்.  மற்ற வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், தங்கள் வீட்டுக் கடனை ஃபெடரல் வங்கிக்கு மாற்றம் செய்து கொண்டு இந்தக் கடனைப் பெறலாம்.
 
இந்த கடனை சென்னை பிராந்தியத்தை (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வட ஆற்காடு) சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த கடனிற்கு எந்த வித பிராசசிங் கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடனை பெற கடன் மாற்றத்திற்கான டாக்குமென்ட்கள், கடன் கணக்கு, வருமானம் குறித்த டாக்குமென்ட்கள், கடந்த இரண்டு வருடம் வருமான வரி செலுத்தியதற்கான விவரங்கள் ஆகியவைகளோடு சென்னை பிராந்தியத்தில் இருக்கும் 30 ஃபெடரல் வங்கிக் கிளைகளை அணுகலாம் என்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வங்கியின் மூத்த அதிகாரிகள் கே சீனிவாசன் மற்றும் கே சி தாமஸ் கூறினர்.

மு.சா.கொளதமன்
படம்: பா. அபிரக்ஷன் (மாணவப்பத்திரிக்கையாளர்)
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ