Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கும் இலவச செக் அப்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் அனைத்து ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கும் இலவச செக் அப் செய்யப்படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிப்படைந்து சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த நிலையில் ஹோண்டா மோட்டர் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடட் இலவச வாகன செக் அப் மற்றும் சர்வீஸ் ட்ரைவை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ட்ரைவ்  டிசம்பர் 24, 2015 வரை தொடரும். வெள்ளத்தால் பாதிப்படைந்து உடனடி வாகன சர்வீஸ் தேவைப்படும் இடங்களுக்காகவே குறிப்பாக இந்த ஆக்டிவிட்டி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 81 ஹோண்டா அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க், சென்னை முழுவதிலும் (58), காஞ்சிபுரம் (12)  & கடலூர் (11) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு அவை அனைத்து வெள்ளம் பாதித்த இடங்களிலும் உள்ள ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கும் இலவச செக் அப் மற்றும் இலவச இஞ்சின் ஆயில் வழங்க ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக, லேபர் சார்ஜும் கம்பெனியால் ஏற்றுக்கொள்ளப்படும். உட்புற ஏரியாக்களில் பாதிப்படைந்த ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கு சர்வீஸ் மற்றும் பழுது பார்க்க, ஹோண்டா மொபைல் சர்வீஸ் வேன்கள் (MSVs) மற்றும் சர்வீஸ்-ஆன்-வீல்ஸ் (SOWs) அமர்த்தப்படுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ