Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.31 லட்சம் கோடி தேவை!

நம் நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.31 லட்சம் கோடி தேவை என்று கிரிசில்  தெரிவித்துள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சார வசதி, சாலை வசதிகளை மேம்படுத்துதல், தொலைத்தொடர்பு, போக்குரவத்து, ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்காக கிட்டத்தட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.31 லட்சம் கோடி தேவைப்படும் என்று கிரிசல் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் என்றும்,  இதற்காக மிக அதிக மூலதனத்தை  கடனாக இவை வழங்க வேண்டியிருக்கும் என்று கிரிசில் கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ