Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமான டிக்கெட்கள் மீது வரி; தீடீரென்று ஒத்திவைப்பு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்கள் மீது 2 சதவிகித வரி விதிப்பு தீடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்கள் மீது 2 சதவிகித வரி விதிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்திருந்தது.  இது குறித்து வரைவு கொள்கையை கடந்த அக்டோபர் 30-ம் தேதி வெளியிட்டது. இந்த புதிய வரி ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட இருந்த இந்த திட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ