Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக குறையும்; மத்திய அரசு தகவல்

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் பொருளாதார ஆய்வில் வளர்ச்சி விகிதம் குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் முன்னதாக 8.1 முதல் 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாய உற்பத்தி குறைவால் வளர்ச்சி விகிதம் குறையும். பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் குறைவு ஏற்பட்டிருப்பதால், நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கான 3.9 சதவிகிததை எட்டுவதில் சிரமம் இருக்கக்கூடும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளும் நெருக்கடி தரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ