Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரயில் நீர்' ஊழல், அரசுக்கு ரூ. 19.5 கோடி நஷ்டம்!

 நாடு முழுவதும் ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு மலிவான விலையில் விற்கப்படும் 'ரயில் நீர்' மினரல் பாட்டில் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 19.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

'ரயில் நீர்' ஊழல் குறித்து விசாரித்து வந்த சிபிஐ, இந்திய ரயில்வே துறையின் 2 முன்னாள் தலைமை வர்த்தக மேலாளர்கள், ஒரு வியாபாரி, ஒரு தனியார் நிறுவனத்தின் சீஇஓ மற்றும் 8 நிறுவனங்கள் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.

"குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்ட அனைவரும் கிரிமினல், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாடியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என சிபிஐ-யின் செய்திதொடர்பாளர் தேவ்பிரீத் சிங் கூறினார்.

இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ராஜ்தானி மற்றும் ஷாத்படி ரயில்களில் 5 முதல் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பாட்டில் தண்ணீருக்கு அரசிடமிருந்து 15 ரூபாய் தொகையைப் பெற்றுக்கொண்டு அரசை ஏமாற்றியுள்ளனர்.

இதனால் இந்திய ரயில்வே துறைக்கு 19.55 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் இந்த தனியார் நிறுவனங்களில் நடத்திய சோதனையின் போது சிபிஐ அதிகாரிகள் 28.5 கோடி ரூபாய் ரொக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close