Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் ஆப்பிள் ஐபோன் விலை அதிரடி குறைப்பு!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 6S மற்றும் 6S பிளஸ் விலையை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 5S-ன் விலை 44,500 ரூபாயாக இருந்தது. இதன்பின் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 6S மற்றும் 6S பிளஸ் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் ஐபோன் 5S-ன் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. இதனால் ஐபோன் 5S-ன் விலை கிட்டத்தட்ட சரிபாதியாக 24,999 ரூபாயாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன் 6S மற்றும் 6S பிளஸ் விலையையும் 16 சதவிகிதம் குறைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். அதன்படி, கடந்த அக்டோபர் 16-ம் தேதி ஐபோன் 6S 16 GB மாடல் 62,000 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, அதன் விலை 52,000 முதல் 55,000 ரூபாய் வரை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ