Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3ஜி ஸ்மார்ட்போன் விற்பனையை முறியடித்தது 4ஜி!

நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் பாதிக்கும் மேற்பட்டவை 4ஜி தொழில்நுட்பம் கொண்டவை என இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பொரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் ஸ்மார்ட்போன் மூலமான இணையதள பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கௐளும் ஒவ்வொரு நகரங்களிலும் 4ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இன்னும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை அனைத்து நகரங்களிலும் வழங்க தொடங்கவில்லை. ஆனாலும் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை மாதத்துக்கு 25.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பாதிக்கும் மேற்பட்டவை 4ஜி தொழில்நுட்பம் கொண்டவை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் 93 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் ஸ்டோர்களில் முந்தைய மாதத்தை விட ஸ்மார்ட்போன் விற்பனை 12.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ