Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆயுள், ஆரோக்கியம், விபத்து காப்பீடு: மூன்றும் இணைந்த ஒரே பாலிசி

ஆயுள், ஆரோக்கியம் மற்றும் விபத்து காப்பீடு நன்மைகள் ஒருங்கிணைந்த ஒரே பாலிசியை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புனித் நந்தா கூறுகையில், "வாடிக்கையாளர்கள் தற்போது ஆயுள், ஆரோக்கியம், விபத்து காப்பீடு மற்றும் கொடிய நோய்களுக்கென தனித்தனியாக பாலிசிகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது, ஆயுள், ஆரோக்கியம் மற்றும் விபத்து காப்பீடு நன்மைகள் ஒருங்கிணைந்த "ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஐ புரோடெக்ட் ஸ்மார்ட்" என்ற பெயரில் பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாலிசி குறைந்த விலையில் வாடிக்கையாளரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
30 வயதுடைய நபர், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு (இறப்பு-ரூ.50 லட்சம், விபத்து மூலமான இறப்பு-ரூ.50 லட்சம், நோய்-ரூ.10 லட்சம்) இன்ஷூரன்ஸ் செய்ய நினைத்தால், ஆண்டு பிரிமியம் 13,320 ஆயிரம் ரூபாய்தான்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ