Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா அதிவேகமாக வளர்ச்சியடையும்; ஹார்வர்டு ஆய்வில் தகவல்

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சியடையும் என்று ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2016-ம் ஆண்டு 7.3% மற்றும் 2017-ல் 7.5% என்ற விகிதங்களில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று ஐநா ஏற்கெனவே கணித்து இருந்தது.

இந்த நிலையில் ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வில் "அடுத்த 10 ஆண்டு காலக்கட்டத்தில் அதிவேகமாக வளரும் ஆற்றல் இந்திய பொருளாதாரத்துக்கு உள்ளது. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுதோறும் 7% வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் 7% என்ற சீரான பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா அதிவேக வளர்ச்சி பொருளாதார நாடாக உயர்வடைய வாய்ப்புள்ளது" என்று ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ