Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுடிஐ-லிருந்து முன்னணி ஃபண்ட் மேனேஜர் விலகல்!

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முன்னணி ஃபண்ட் மேனேஜராக கருதப்படும் அனூப் பாஸ்கர் யுடிஐ அசட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.

சமீப காலமாக மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிறந்து விளங்கும் ஃபண்ட் மேனேஜர்கள் முன்னணி நிறுவனங்களிலிருந்து விலகி வருகின்றனர். அதன்படி, பிராங்க்ளின் டெம்பிளெடன் நிறுவனத்திலிருந்து சிவசுப்பிரமணியன், ஐடிஎப்சி எம்எஃப் நிறுவனத்திலிருந்து கென்னத் அன்ட்ரடே போன்றோர் விலகி இருந்தனர்.

இந்த நிலையில் 48 வயதாகும் அனூப் பாஸ்கர் யுடிஐ அசட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார். இவர் 2007-ம் ஆண்டு முதல் யுடிஐ நிறுவனத்தில் ஈக்விட்டி சொத்துகளை நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ