Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர் அண்ட் டி பட்டியல்: இந்தியாவில் டாட்டா மோட்டார்ஸ் மட்டுமே தேர்வு!

உலக அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அதிகம் முதலீடு செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமே இடம்பிடித்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அதிகம் முதலீடு செய்யும் நிறுவனங்கள் பட்டியலை ஐரோப்பிய ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக அளவில் டாப் 50 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து சாம்சங்(2), மைக்ரோசாப்ட்(3), இன்டெல்(4) மற்றும் நோவார்ட்டிஸ் (5) நிறுவனங்கள் உள்ளன.


இந்த பட்டியலில் இந்திய நிறுவனங்களில் டாட்டா மோட்டார்ஸ் மட்டுமே இடம் பிடித்துள்ளது.
சென்ற ஆண்டில் டாட்டா மோட்டார்ஸ் 104-வது இடத்தில் இருந்தது. இப்போது, இந்த நிறுவனம் 49-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ