Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூரின் 'நாராயண ஹிருதாலயா' பங்குகளுக்கு அமோக வரவேற்பு!

பெங்களூரில் புகழ்பெற்ற நாராயண ஹிருதாலயா மருத்துவமனை பங்குகளை வெளியிட்டுள்ளது. இந்த பங்குகளுக்கு சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


பெங்களூரில் புகழ்பெற்ற நாராயண ஹிருதாலயா ஐபிஓ சந்தையில் ஒட்டு மொத்தமாக 8.63 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது (Over subscribed). இதில் பெரும்பாலும் 24.23 மடங்கு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளனர்.

சில்லறை முதலீட்டாளர்கள் 1.87 மடங்கும், அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள் 3.62 மடங்கும் பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஷூதோஷ் ரகுவான்ஷி தெரிவித்துள்ளார்.

ஒரு பங்கின் விலை ரூ.245-250 ஆக நிர்ணயித்து, பங்கு விற்பனை மூலம் ரூ. 613 கோடி திரட்ட நாராயண ஹிருதாலயா திட்டமிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ