Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1000 டன்னில் தங்கம் இறக்குமதி; 2014-ஐ மிஞ்சியது 2015

நடப்பு ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 850 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 650 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 சதவிகிதம் அதிகம். கடந்த ஆண்டு 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக அகில இந்திய ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ