Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்செல்-ஐ கையகப்படுத்த அம்பானி திட்டம்!

ஏர்செல்-ஐ கையகப்படுத்த அனில் அம்பானி திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தொலைத்தொடர்பு சேவை வழங்கிவரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் 4-வது பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்திற்கு 11 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏர்செல் நிறுவனத்துக்கு 8.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் மொபைல் சேவை வர்த்தகத்தில் ஆர்-காம், ஏர்செல் இணைப்பு பற்றி ஏர்செல் நிறுவனத்தின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சிந்தியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ