Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை; பணத்தட்டுபாடு ஏற்படும் அபாயம்!

மிலாதி நபி, கிருஸ்துமஸ் பண்டிகைகள்  அடுத்தடுத்து வருவதால் வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. இதனால் ஏடிஎம்-களில் பணத்தட்டுபாடு ஏற்படும் சூல்நிலை உருவாக வாய்ப்புள்ளது

 

இந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மிலாதி நபி, கிருஸ்துமஸ் பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால்   வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் வரும் 26-ம் தேதி மாதத்தில் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனால், வங்கிகள் 24, 25, 26 மற்றும் 27-ம் தேதி வரை தொடர்ந்து 4 தினங்களுக்கு இயங்காது.
டிச.24-ம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் ஏடிஎம்-களில் பணத்தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து வைப்பது நல்லது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP