Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்தில் தமிழருக்கு உயரிய விருது!

புதுமையான கண்டுபிடிப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த நந்தகோபால் லஷ்மிநாராயணனுக்கு இங்கிலாந்தில் உயரிய விருது கிடைத்துள்ளது.

2015-ம் ஆண்டின் சிறந்த புதுமையான கண்டுபிடிப்புக்காக 'பிஸினஸ் லீடர்' எனும் உயரிய விருதினை லண்டனில் அண்மையில் நடைபெற்ற விழாவில் நந்தகோபால் லஷ்மிநாராயணன் பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நந்தகோபால் லஷ்மிநாராயணன் சாப்ட்வேர் இன்ஜினியர். கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர். இப்போது, லண்டனில் உள்ள லிங்கன் செக்யூரிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நந்தகோபால் லஷ்மிநாராயணன் பிரிட்டன் அரசின் அறிவுசார் தகவல் பறிமாற்றக் கூட்டுத் திட்டத்தின் கீழ், லிங்கன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 'இ-லாக்' எனும் அதிநவீன மின்னணுப் பாதுகாப்பு சாதனத்தை அதிநவீன மின்னணுப் பாதுகாப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளார்.

நந்தகோபால் லஷ்மிநாராயணன் உருவாக்கிய 'இ-லாக்' சாப்ட்வேரைப் பயன்படுத்தி, மின்னணு பூட்டு, சாவிகளை இயக்க முடியும். பேட்டரியின்றி இயங்கும் இந்த வகைப் பூட்டு சாவிகளை, போலியாக தயாரிக்கவோ, நகலெடுக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ