Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்ச்சூன் பட்டியல்; இந்தியன் ஆயில் டாப், ரிலையன்ஸ் இரண்டாமிடம்!

2015-ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய தொழில் நிறுவனங்களின் பட்டியலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2015-ம் ஆண்டில் வருவாய் அடிப்படையில் தொழில் நிறுவனங்களின் பட்டியலை `பார்ச்சூன் 500 இந்தியா’ என்ற தலைப்பில் பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.4,51,911 கோடி.

இதைத்தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.3,82,565 கோடி. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.2,67,025 கோடி வருவாயுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நான்காவது இடத்திலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ