Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஓ மூலம் ரூ.13,600 கோடி நிதி திரட்டல்!

2015-ம் ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு மூலம் (ஐபிஓ) 13,600 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொதுப் பங்கு வெளியீட்டில் மந்த நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மரபு சாரா எரிசக்தி துறை, லாஜிஸ்டிக்ஸ், பார்மா, எலெக்ட்ரானிக்ஸ், ஏர்லைன்ஸ் என பல்வேறு துறைகளில் பல நிறுவனங்கள் ஐபிஓ-க்களை வெளியிட்டுள்ளன. இதில் வெளியிடப்பட்ட ஐபிஓக்கள் 60 சதவிகிதம் புதிய நிறுவனங்கள்.

இந்த ஆண்டு 21 நிறுவனங்களின் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட மொத்த நிதி ரூ. 13,600 கோடி. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட ஐபிஓக்களில் காபி டே நிறுவனம் 1,150 கோடி ரூபாயும், ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் ரூ.1,020 கோடி திரட்டியுள்ளது. மொத்தமாக இந்த ஆண்டு  21 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ. 13,600 கோடி நிதி  திரட்டியுள்ளன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close