Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலவசமாக பணியாளர்களுகு 4ஜி இன்டர்நெட் வசதி! ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் பிறந்த தினத்தை (டிசம்பர் 28) முன்னிட்டு அந்நிறுவனத்தின் 4ஜி சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை வர்த்தக ரீதியில் துவங்கப்படுகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தொலைத் தொடர்பு சேவையை முதன் முதலில் தனது குழும ஊழியர்களுக்கு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தனது ஊழியர்களுக்கு இலவசமாக 4ஜி இன்டர்நெட் வசதியை வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 4ஜி இன்டர்நெட் வசதியை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார்.





 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close