Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புத்தாண்டை முன்னிட்டு ஸ்பைஸ் ஜெட் அசத்தல் ஆஃபர்

கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

இன்னும் நான்கு நாட்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற ஸ்பைஸ் ஜெட் முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவிற்குள் விமானத்தில் பயணம் செய்ய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் அடிப்படைக் கட்டணத்தைத் தாண்டி வேறு கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என்பதுதான் அந்த இனிப்பான செய்தி.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. இந்தச் சேவையைப் பயன்படுத்த இருக்கையை முன்பதிவு செய்ய வேண்டும். இன்றிலிருந்து (28.12.2015) வரும் 31.12.2015 இரவு 12 மணி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

2.  2016 ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஏப்ரல் 12 வரை இந்தியா முழுவதும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நேரடி விமான சேவை மட்டுமே இந்த சலுகையில் அடங்கும்.

3. அடிப்படைக் கட்டணம் தாண்டி வேறு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை. குறைந்தபட்ச கட்டணம் ரூ. 716 (வரி சேர்க்கப்படாதது)

4. பயணம் தவிர்க்கப்படும் பட்சத்தில் கட்டணம் திருப்பி வழங்கப்படும். ரத்து செய்ய குறிப்பிட்ட கட்டணம் உண்டு.

5. இந்த முன்பதிவு டிக்கெட்டை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கும் குறிப்பிட்ட கட்டணம் உண்டு. முதலில் வருபவருக்கே முன் உரிமை தரப்படுமாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ