Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு!

நடப்பு ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் ரூ. 70,000 கோடி முதலீடு செய்துள்ளன.

முதலீட்டாளர்கள் அதிகளவில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதால், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் ரூ. 23,843 கோடி மட்டுமே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தன. இந்த நிலையில் 2015-ம் ஆண்டில் ரூ.70,173 கோடி பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதாக இந்திய பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் செபி தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ