Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல் விலை 40 சதவிகிதம் அதிகரிப்பு! சவூதி அரசு அதிரடி

சவூதி அரேபியாவில் பெட்ரோல் விலை 40 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான சவூதி அரேபியாவில் முக்கிய வருமானமே பெட்ரோலியப் பொருட்கள்தான். இதிலிருந்துதான் அரசின் வருமானத்தில் 80 முதல் 90 சதவிகிதம் வருகிறது.

இப்போது ரூ. 6500 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டைத் தொடர்ந்து 40 சதவிகித விலை உயர்வை சவூதி அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம், குடிநீர், டீசல், கெரசின் ஆகியவற்றுக்கான மானியத்தையும் சவூதி அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ