Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் ரத்து! ரிசர்வ் வங்கி பரிந்துரை

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் தீபக் மொகந்தி தலைமையிலான குழு தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதில்,  வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரின் செல்போன் எண்ணை எளிதான படிவம் மூலம் பதிவு செய்வதை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். செல்போன் வங்கிச் சேவைக்கான தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த வேண்டும்.

அனைவருக்கும் நிதிச் சேவை கிடைக்கச் செய்யும் வகையில் கூடுதல் ஏடிஎம்-கள் அமைக்க வேண்டும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close