Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாடிக்கையாளர்களை கவர முதல் முறையாக பிஎஸ்என்எல் புதிய சலுகை!

நம் நாட்டில் வருவாயை பெருக்கும் நோக்கில் தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற முக்கிய விழா நாட்களில் பூஸ்டர் பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில பேச அல்லது எஸ்எம்எஸ் அனுப்ப செல்போன் நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.

இதன் மூலம் விழாக்கால வாழ்த்து தெரிவிக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வரும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் பூஸ்டர் சலுகை செல்லாது என்று பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பூஸ்டர் தடை செய்யப்பட்ட நாட்களிலும் எஸ்எம்எஸ் அனுப்ப வசதியாக ஆங்கில புத்தாண்டுக்கு புதிய பூஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 22 ரூபாய்க்கு எஸ்எம்எஸ் பூஸ்டர் ரீசார்ஜ் செய்தால் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் 130 உள்ளூர், எஸ்டிடி எஸ்எம்எஸ்கள் கட்டணமின்றி அனுப்பலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ