Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பான் எண் கட்டாயம்; உங்கள் பான் எண்ணை எதற்கெல்லாம் குறிப்பிட வேண்டும் தெரியுமா?


ம் நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பான் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

 

ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் எந்தப் பொருளை ரொக்கத்துக்கு வாங்கினாலும், விற்றாலும் ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்படும் என்று மத்திய அரசு கூறி இருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பான் எண் குறிப்பிடுவதற்கான வரம்பை ரூபாய் 2 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜன் தன் யோஜனா திட்டம் தவிர அனைத்து வங்கிக்கணக்கு தொடங்குவதற்கும் பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

கீழ்க்கண்ட பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம்.

 

வரிசை

பரிவர்த்தனை தன்மை  

 

பான் குறிப்பிடுவது கட்டாயம் (விதி 114 B) 

 

 

தற்போதுள்ள தேவை

புதிய தேவை

1.

அசையா சொத்து

 

ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் மதிப்பில் விற்பனை செய்தல் / பர்சேஸ் செய்தல்

i) ரூ.10 லட்சத்திற்கு மேலான விற்பனை/பர்சேஸ்

ii) ரூ.10 லட்சத்திற்கு மேலான தொகைக்கு முத்திரை தாள் மதிப்பிடும் அதிகாரியால் மதிப்பிடப்பட்ட சொத்துக்களுக்கும் PAN வேண்டும்.

2.

மோட்டார் வாகனம் (இரு சக்கர வாகனம் தவிர)

எல்லா விற்பனை / பர்சேஸ்கள்

மாற்றம் இல்லை

3.

டைம் டெப்பாசிட்

பாங்க்கிங் கம்பெனியுடன் ரூ.50,000 மேலான டைம் டெப்பாசிட்

 

 

i) கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் அலுவலகம், நிதி, NBFC கம்பெனிகளுடன் டெப்பாசிட்களுக்கு PAN தேவை.

 

ii) வருடத்தில் மொத்தம் ரூ.5 லட்சத்திற்கு மேலான டெப்பாசிட்கள்

 

 

 

 

4.

அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியுடன் டெப்பாசிட்

 

ரூ.50,000 மேலான

இடையில் விலகுதல்

5.

செக்யூரிட்டிலின் விற்பனை அல்லது பர்சேஸ்

 

ரூ.1 லட்சத்திற்கு மேலான மதிப்பில் விற்பனை / பர்சேஸ்க்கான ஒப்புதல்

மாற்றம் இல்லை

6.

 

பாங்க்கிங் கம்பெனியுடன் கணக்கு தொடங்குதல் (டைம் டெப்பாசிட் தவிர)

எல்லா புதிய கணக்குகளும்.

i) அடிப்படை சேமிப்பு வங்கி டெப்பாசிட் கணக்கு நீங்கலாக (இந்த கணக்குகள் தொடங்க PAN தேவையில்லை)

ii) கூட்டுறவு வங்கிகளும் இணங்க இருத்தல்

7.

டெலிபோன் / செல்போன் இணைப்புகள் நிறுவுதல்

எல்லாவற்றிலும்

 

டிஸ்கன்டினியூடு

8.

ஓட்டல் / ரெஸ்டாரண்ட் பில் (கள்)

எந்த ஒரு நேரத்திலும் ரூ.25,000 மேலான (எந்த ஒரு வடிவிலான பேமெண்ட் மூலம்)

ரூ.50,000 மேலான கேஷ்பேமெண்ட்

9.

பாங்கர்ஸ் செக்கு பே ஆர்டர் / பாங்கு டிராப்ட்-ன் கேஷ் பர்சேஸ்!

எந்த ஒரு நாளிலும் மொத்தமாக ரூ.50,000 அல்லது அதற்கு மேல் தொகை

எந்த ஒரு நாளிலும் ரூ.50,000 மேலான

10.

பாங்க்கிங் கம்பெனியுடன் கேஷ் டெப்பாசிட்

எந்த ஒரு நாளிலும் மொத்தமாக ரூ.50,000 அல்லது அதற்கு மேல் கேஷ்

ஒரு நாளிலும் ரூ.50,000 மேலான கேஷ் டெப்பாசிட்

11.

வெளிநாட்டு பயணம்

எந்த ஒரு நேரத்திலும் ரூ.25000 மேலான தொகையில் வெளிநாட்டு பயணத்துடன் தொடர்பான கேஷ் பேமெண்ட் கட்டணம், டிராவல் ஏஜண்ட்டிற்கு பேமெண்ட், அன்னிய செலவாணி பர்சேஸ் செய்தல் உள்பட)

எந்த ஒரு நேரத்திலும் ரூ.50,000 மேலான தொகையில் வெளிநாட்டு பணத்தை பர்சேஸ் செய்தல் அல்லது வெளிநாட்டு பயணத்துடன் தொடர்பான கேஷ்பேமெண்ட் (கட்டணம், டிராவல் ஏஜண்டிற்கு பேமெண்ட் உள்பட)

12.

கடன் அட்டை

 

கடன் அட்டைக்காக பாங்கிங் கம்பெனி / இதர ஏதேனும் கம்பெனி / இன்ஸ்ட்டியூஷனுக்கு விண்ணப்பம்

மாற்றம் இல்லை கூட்டுறவு வங்கிகளும் இணங்க இருத்தல்

13.

பரஸ்பர நிதி யூனிட்கள்

பர்சேஸ்க்கான ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பேமெண்ட்

பர்சேஸ்க்கான ரூ.50,000 மேலான பேமெண்ட்

14.

கம்பெனியின் பங்கு

அதன் பங்கை பெறுவதற்காக கம்பெனிக்கு ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பேமெண்ட்

i) டிமாட் கணக்கு தொடக்கம்.

ii) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1 லட்சத்திற்கு அதிகமான தொகைக்கு பட்டியலில் இல்லாத கம்பெனியின் பங்குகளை விற்பனை அல்லது பர்ச்சேஸ் செய்தல்

15.

கடன் பத்திரங்கள் / பாண்டுகள்

 

அதன் கடன் பத்திரங்கள் / பாண்டுகளை பெறுவதற்கான கம்பெனி / இன்ஸ்ட்டியூஷனுக்கு ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பேமெண்ட்

 

ரூ.50,000 மேலான பேமெண்ட்

16.

RBI பாண்டுகள்

 

அதன் பங்குகளை பெறுவதற்காக RBI க்கு ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பேமென்ட்

ரூ.50,000 மேலான பேமெண்ட்

 

 

 

 

17.

லைஃப் இன்சூரன்ஸ் ப்ரீமியம்

இன்சூர்க்கு ப்ரிமியமாக ஒரு வருடத்தில் ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பேமெண்ட்

ஒரு வருடத்தில் ரூ.50,000 மேலான பேமெண்ட்

18.

தங்கம் / தங்கம் வைரம் பர்சேஸ் செய்தல்

ரிஸ்-க்காக அல்லது எந்த ஒரு நேரத்திலும் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேலான பேமெண்ட்

 

இந்த டேபிளில் அடுத்த அயிட்டத்துடன் நீக்கப்பட்டது மற்றும் சேர்க்கப்பட்டது.

19.

சர்வீஸ்கள் அல்லது குட்ஸ்களின் விற்பனை அல்லது பர்சேஸ்

தேவையில்லை

ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சம் மேலான சர்வீஸ்கள் அல்லது குட்ஸ்களின் விற்பனை / பர்சேஸ்

20.

பேமெண்ட் & செட்டில்மெண்ட் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ப்ரீபெய்டு இன்ஸ்ட்றாமென்ட்கள் / கேஷ் கார்டுகள்

தேவையில்லை

 

ஒரு வருடத்தில் மொத்தம் ரூ.50,000 மேலான கேஷ் பேமெண்ட்

 

 
 


 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ