Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2016-ல் 45 சதவிகித அன்னிய முதலீடு கிடைக்குமா?

நடப்பு ஆண்டில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான கால அளவில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 18 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,72,315 கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது.


இந்த நிலையில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கையால் 2016-ல் அன்னிய நேரடி முதலீடு 45 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (டிஐபிபி)  செயலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். 

நடப்பு ஆண்டில் சேவைகள், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள், தொலைத்தொடர்பு, மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகள் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
ரப்பர், காபி, பாதுகாப்பு துறை, வங்கி உள்ளிட்ட துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளால் 2016-ல் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடுகள் 40-45 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ