Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா!

2015-ல் உலகம் முழுவதும் 110 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 9 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


Reporters without borders என்ற அமைப்பு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2015-ல் உலகம் முழுவதும் 67 பத்திரிக்கையாளர்கள் பணியின்போது கொலை செய்யப்பட்டுள்ளனர். 43 பேர் காரணம் ஏதும் தெரியாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தம் 2015-ல் 110 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவைப் பொறுத்தவரை பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மட்டும் 9 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பத்திரிகையாளர்கள் தங்களது பணியின் போதே கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்றே தெரியவில்லை என்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2015-ல் பத்திரிக்கையாளர்கள் அதிகமாக கொலை செய்யப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில் ஈராக் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சிரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளது. பட்டியலில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ