Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட் சிட்டி: தமிழக அரசு திட்ட அறிக்கை சமர்பித்தது!

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் 12 நகரங்களுக்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம், தமிழக அரசு சமர்பித்துள்ளது.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நவீன நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அறிக்கையை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்துள்ளது. இதன்படி 12 நகரங்களை நவீனமாக மாற்றம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ