Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் சல்மான் கான் இணையதளத்துக்கு பலத்த எதிர்ப்பு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 50வது பிறந்த நாளை முன்னிட்டு புதிததாக கான் மார்க்கெட் ஆன்லைன் டாட் காம் என்ற இணையதளத்தை ரசிகர்களுக்காக ஆரம்பித்துள்ளார். இந்த இணையதளத்தில் சல்மான் கானின் ரசிகர்கள் சுய விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் டெல்லியில் உள்ள கான் மார்க்கெட் வர்த்தக சங்கம் நடிகர் சல்மான் கானின் புதிய இணையதளத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கான் மார்க்கெட் என்ற பெயர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பிரபலமானது. சல்மான் கானின் இந்த இணைய தளத்தால் எங்களது சந்தையின் பெயர் தவறான முறையில் பயன்படுத்தப்படும். இதனால் எங்களுக்கென்று உள்ள முத்திரை பாதிக்கப்படும் என்று கான் மார்க்கெட் வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்சீவ் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ