Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குலுக்கல் நடத்தி விமான பயணம்! ஏர் இந்தியா புது முடிவு

புத்தாண்டை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் இரண்டு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

அதில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 8 மணி முதல், ஜனவரி 1-ம் தேதி காலை 8 மணிக்குள் மெட்ரோ நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு ஒரு வழி பயணக் கட்டணம் 5 ஆயிரத்து 16 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது திட்டத்தில் ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரை டெல்லி - மும்பை இடையேயான சாதாரண கட்டண பயண சீட்டு பெற்றவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு முதல் வகுப்பு பயணம் அளிக்கப்பட உள்ளது. விமானம் ஏறுவதற்கு முன்பு குலுக்கல் நடத்தி ஒருவரைத் தேர்வு செய்தபின் அவருக்கு முதல் வகுப்பு பயண வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ