Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று முதல் "பான் எண்" குறித்து தவறான தகவல் அளித்தால் 7 ஆண்டு ஜெயில்!

நம் நாட்டில் பான் எண் இல்லாதவர்கள் அரசிற்கு தவறான தகவல் அளித்தால் 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இன்று (01.01.16) முதல் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலோ, ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துகள் வாங்கினாலோ, ஓட்டல் பில்தொகை, வெளிநாட்டு விமான பயண டிக்கெட் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினால் ‘பான்’ எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவித்தது. இவை உள்பட மொத்தம் 20 பரிவர்த்தனைகளுக்கு ‘பான்’ எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில் ‘பான்’ எண் இல்லாதவர்கள், தவறான தகவலை அளித்தால், 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. பொய் தகவல்கள் இடம்பெற்றது நிரூபணமானால், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய இருந்த தொகை ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 6 மாதம் முதல் 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய நினைத்த தொகை, ரூ.25 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 3 மாதம் முதல் 2 ஆண்டுவரை கடுங்கால் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ