Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாடு போவதைக் குறைக்கப் போகிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்து 19 மாதங்கள் ஆகிறது. இதுவரை அவர் 33 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார்.  ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும்போதும், எப்பப் பார்த்தாலும் வெளிநாட்டிலேயே இருக்கிறார். இந்தியாவிலேயே இருப்பதில்லை. மோடி ஊர் சுத்த கலம்பிட்டாருங்க என்று எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தன.

மோடியின் வெளிநாட்டு பயணங்களால் ரூ.200 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. மோடியின் வெளிநாட்டு பயணத்தால் எந்த பயனும் இல்லை. அடிக்கடி வெளிநாடு செல்வதால் மக்களின் வரிப் பணத்தை மோடி வீணடிக்கிறார் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது வந்தன.

இந்த நிலையில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் 2016–ம் ஆண்டு வெளிநாட்டு பயணத்தை அதிக அளவில் மோடி குறைக்கப் போவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்கு சென்று உறவை பலப்படுத்துவதற்கு பதில் இதுவரை ஏற்படுத்தியுள்ள தொடர்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனி சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் மட்டுமே மோடி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP