Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களுக்கு "பத்வா"

சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களில் பசுவின் கோமியம் கலக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதால் பதாஞ்சலி பொருட்களுக்கு முஸ்லிம் அமைப்பால் பத்வா (தடை) விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பதாஞ்சலி நிறுவனம் கூறுகையில், "ஹரித்துவாரில் உள்ள பதாஞ்சலி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரம் முஸ்லிம்கள் பணியாற்றுகின்றனர். எதிர்காலத்தில் ஏராளமானோருக்கு பணி வழங்க உள்ளோம். இமாலயன், ஹம்தார்த் ஆகிய நிறுவனங்கள் முஸ்லிம்களால் நடத்தப்படுபவை.

பதாஞ்சலியின் 800 பொருட்களில் 5 பொருட்களில் மட்டுமே பசுவின் கோமியம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது பதாஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு விளைவிக்கும் முயற்சி" என்று பதாஞ்சலி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ