Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி சரிவு!

நம் நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 38 சதவிகிதமாக உள்ளது.

மின்சாராம், சிமென்ட், நிலக்கரி, பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். இந்த 8 துறைகளின் உற்பத்தி கடந்த நவம்பர் மாதத்தில் 1.3 சதவிகிதம் குறைந்துள்ளது.

மின்சார உற்பத்தி குறைந்தது, சிமென்ட், உருக்கு உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில் நவம்பரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் இந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சரிவடைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ