Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமலுக்கு வந்தது

செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் "கால் டிராப்" சேவை குறைபாட்டுக்கு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்படுவது கால் டிராப் ஆகும். கால் டிராப்பால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்தது. இழப்பீடு வழங்க தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிராய் தெரிவித்தது. இது 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கால் டிராப்புக்கு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்ததால், ஒரு கால் கால் டிராப்புக்கு ரூ.1 வீதம் நாள் ஒன்றுக்கு அதிக அளவாக 3 கால் டிராப்புக்கு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP